கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்

#Arrest #Dehiwala
Prathees
3 years ago
கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த புலி எனப்படும் மலிது லக்மால் என்ற சந்தேக நபர், சியூரபுர அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து,  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரத்மலானை கொனகோவில மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை மவுண்ட் மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினரான திரு. ரஞ்சன் டி சில்வா 2018 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4