இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டம்

#SriLanka #sri lanka tamil news #Train #Bandula Gunawardana #Lanka4
Nila
3 years ago
இலங்கையில்  விரைவில் அமுலுக்கு வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டம்

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை 41 கிலோமீற்றர் தூரத்திற்கு தூண்களின் மூலம் மெட்ரோ ரயில் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளது. 25 புகையிரத நிலையங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனியார் நிறுவனம் ஒன்று ரூபா 2,5 பில்லியன் டொலரில் இதற்கான  முதலீட்டை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முதலீட்டாளர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

 இந்த திட்டத்திற்கு சமகாலத்தில் தெரிவு செய்யப்பட்ட 05 ரயில் நிலையங்களும், அதனை அண்டியுள்ள பகுதிகளும் புதிய நகரங்களாக நவீன மயப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீள முடியாத கடனால் பொருளாதார நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு இது தேவையா என அரசியல் அவதானிகள் சமூக வலைத்தளங்களில் விசனம் தெரிவித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4