காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கவேண்டுமா?

#Love #Marraige #Horoscope #Lanka4 #Tamilnews
Nila
3 years ago
காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கவேண்டுமா?

திருமணம் என்றாலே இருமனம் சேர்வதே திருமணம். ஆனால் அந்த இரு மனங்களையும் சேர்த்து வைப்பது ஜாதகம் என்னும் பொருத்தமே என்பது பெரியோர்களின் ஐதீகம்.

ஆனால் ஜாதகப் பொருத்தம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தோற்றுப்போயும் இருக்கின்றன. இவ்வாறு பொருத்தமே பார்க்காது இரு மனங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து காதல் திருமணம் செய்து வெற்றிவாழ்க்கையை வாழ்வோரும் உள்ளனர் என்பது கண்கூடு.

உண்மையில் காதல் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் தேவைதானா என்பதே இப்பதிவு....

காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஜாதக பொருத்தம் பார்க்கவேண்டுமா? - பெரும்பாலனவர்களுக்கும், காதலித்து கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படும் சந்தேகம் இது. 

சில பேர் மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதும், ஜாதக பொருத்தம் தானாகவே வந்துவிடும் என்பர். பெரும்பாலான காதல் திருமணங்கள் வெறும் பாலின ஈர்ப்பில் நடைபெறுகின்றன. மேலும் காதல் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணம் செய்யும் பொழுது இருக்கும் சந்தோஷம் காலம்  படிப்படியாக குறைந்துவிடுகிறது. 

பொருத்தம் இல்லாவிட்டாலும், காதலித்து கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இணைய வேண்டும் எனில், பரிகாரம் செய்து இணைக்கலாம். ஜாதக பொருத்தம் பார்க்கும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பொருத்தம்) இல்லாவிட்டாலும், பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமும், ஆண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமும் சரியாக இருந்தால் போதும். 

ஆனால் யோனி பொருத்தம் (தாம்பத்திய பொருத்தம்) கட்டாயம் இருக்க வேண்டும். தாம்பத்திய பொருத்தம் இருந்தால் கணவன், மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் பிரிய மாட்டார்கள். 

பெரும்பாலான ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் தன் துணை அழகாக இருந்தாலும் வேறு நபருடன் தவறான உறவு கொள்வதற்கு மிக முக்கிய காரணம் யோனி பொருத்தம் சரியாக அமையாததுதான். 

பொருத்தம் பார்ப்பது மிக முக்கிய காரணம் என்னவெனில், எதிர்காலத்தில் இருவருக்கும் வரக்கூடிய திசா அமைப்புகள், அவற்றின் நற்பலன்கள் போன்றவற்றை கணித்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் மிக கடினமான நேரம் வராமல்   இணைத்தால்தான் வாழ்வு வளம் பெறும். இல்லறம் நல்லறமாகும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4