இன்றைய வேத வசனம் 01.02.2023: உன் பாவங்கள் மன்னித்தேன் இனி பாவம் செய்யாதே"

#Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 01.02.2023: உன் பாவங்கள் மன்னித்தேன் இனி பாவம் செய்யாதே"

அமைதியான காலை நேரம்! சில்லென்ற காற்றுடன் கூடிய சிறுதளவு சூரிய வெப்பம்!
திடிரென சத்தம்.! ஒரே பரபரப்பு மக்கள் கூட்டம்.. ஒரு பெண்ணை கல்லெறிந்துக் கொண்டே வந்தனர்...

அவளை 'பாவி' என்றான் பரிசேயன். 'வேசி' என்றான் சதுசேயன். 'விபச்சாரி' என்றான் வேதபாரகன்.
கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்டவளை 'கல்லெறிய வேண்டும்' என்றது மோசையின் நியாயப்பிரமாணம்.
கண்ணீருடனும், காயத்துடனும், வலியோடும், வேதனையோடும் காணப்பட்டாள்.

இயேசுவோ, குனிந்து எழுதிக் கொண்டிருந்தார் எதையோ.!
'பாவம்' ஒட்டிக்கொள்ளும் என்றான் பரிசேயன். 'சாகடிப்போம்'  என்றான் சதுசேயன். 'விரட்டுவோம்'  என்றான் வேதபாரகன்.

இயேசுவின் பேச்சைக் கேட்க, குயில் கூவும் சத்தத்தை
சற்று குறைத்துக் கொண்டது.
"நீதிமான் என நினைப்பவன் நியாயந்தீர்க்கட்டும்"  என்றார்.

நீதியுள்ளவர் இப்படி சொன்னதால் அநீதியுள்ளவர்கள் அமைதலாய் போனார்கள்.
ஒருவரையும் காணாத அவர் அவளைக் கண்டு சொன்னார் "உன் பாவங்கள் மன்னித்தேன் இனி பாவம் செய்யாதே"
அன்பரின் அன்பை நினைத்து
அழுகையை நிறுத்தி ஆறுதலுடன் நடந்தாள். (#யோவான் 8:1-11)
ஆமென்!! அல்லேலூயா!!!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4