சிம்பு கேட்ட அதிக சம்பளத்தினால் தெரிந்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Mani
3 years ago
சிம்பு கேட்ட அதிக சம்பளத்தினால் தெரிந்து ஓடும் தயாரிப்பாளர்கள்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் சிம்பு. ஒரு கட்டத்தில் பல வெற்றிகரமான படங்களை கொடுத்து பரபரப்பாக இயங்கி வந்த சிம்புவிற்கு இடையில் சில ஆண்டு காலம் சோதனை காலமாக அமைந்தது. அவர் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார் மற்றும் உடல் எடை கூடி ஆளே மாறிப்போனார்.

இதை அடுத்து கடின உழைப்பால் மீண்டும் பழைய சிம்புவாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' படத்தின் மூலம்  தன்  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், இதை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் மூலம் வெற்றியைப் பெற மீண்டும் சிம்புவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது இந்நிலையில் சிம்பு கிருஷ்ணாவின் இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்துள்ளார் இப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சிம்பு அதிகப்படியான சம்பளம் கேட்கிறாராம், இதன் காரணமாக சிம்புவிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் மற்றும் கால்சீட்டு கேட்டு வரும் தயாரிப்பாளர்கள் தெரிந்து ஓடுகிறார்களாம், தயாரிப்பாளர் லலித், இயக்குனர் விஜய் சுந்தர் போன்றவர்கள் சிம்பு அதிக சம்பளம் கேட்டதால் பின்வாங்கியுள்ளனர் என்ற தகவல் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து தற்போது சிம்புவை பற்றிய இத்தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4