ஜனவரியில் மாத்திரம் இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை!

#SriLanka #sri lanka tamil news #Tourist #Airport
Mayoorikka
3 years ago
ஜனவரியில் மாத்திரம் இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை!

2023 ஜனவரியில் 1 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2022 இல் பதிவாகிய 82 ஆயிரத்து 327 என்ற சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 20 ஆயிரத்து 218 சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து 25 ஆயிரத்து 254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13 ஆயிரத்து 759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8 ஆயிரத்து 483 பேரும் வருகை தந்துள்ளனர். 

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஜனவரி மாதத்திற்கான மீதமுள்ள மூல சந்தைகளாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4