உருக்கமாக மன்னிப்பு கேட்ட சமந்தா கவலைப்படாதீங்க என்று கூறி தேற்றிய விஜய் தேவர்கொண்டா

Mani
1 year ago
உருக்கமாக மன்னிப்பு கேட்ட சமந்தா கவலைப்படாதீங்க என்று கூறி தேற்றிய விஜய் தேவர்கொண்டா

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. மயோசரிஸ் என்ற அரிய வகை தசை அலர்ஜி நோயால் சமந்த  பாதிக்கப்பட்டுள்ளார் இதற்காக வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் சமந்தா தான் ஒப்பந்தமான விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்க முடியாமல் போனது மற்றும் சில படங்களில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது, 
தற்போது தனது நோய் பாதிப்பிற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய சமந்தா படப்பிடிப்புகள் மற்றும் படங்களின் ப்ரோமோஷன்களில் பங்கு பெற்று வருகிறார்.

சமந்தா நடித்துள்ள சகுந்தலம் திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை சமந்தா பங்கேற்றார் திடீரென எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டு அழுத வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கலங்கினர்.

இதனிடையே சமந்தா இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்ட கதாநாயகனாக நடிக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் 60% நிறைவடைந்த நிலையில் சமந்தா தசை அலர்ஜி நோய்கள் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் குஷி படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு நடைபெறாமல் இருக்கிறது இந்நிலையில் சமந்தா சிகிச்சைக்கு பிறகு உடல் தேற்றியுள்ளார். இதனால் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

விஜய் தேவர்கொண்ட அவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் இடையே நல்ல நட்பு உள்ளது,சமந்தாவின் பிறந்தநாள் அன்று காஷ்மீருக்கு சென்று விஜய் தேவர்கொண்டா வாழ்த்து கூறினார், இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் குஷி படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சமந்தா படம் விரைவில் தொடங்கப்படும் விஜய் தேவர்கொண்டா மற்றும் ரசிகர்கள் என்னை மன்னியுங்கள் என பதிலளித்திருந்தார். இந்நிலையில் சமந்தாவின் இந்த பதிவை ஷேர் செய்துள்ள விஜய் தேவர்கொண்டம் நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் பெரிய புன்னகையுடன் மீண்டும் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்,மேலும் ஹார்ட்டின்  சிம்பலையும் ஷேர் செய்துள்ளார் இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடம் லைக்ஐ பெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!