பிரித்தானியாவில் சாரதி அனுமதி பத்திரம் பெறுபோருக்கு முக்கிய தகவல்! அமுலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை

#Britain
Mayoorikka
1 year ago
பிரித்தானியாவில் சாரதி அனுமதி பத்திரம் பெறுபோருக்கு முக்கிய தகவல்! அமுலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை

பிரித்தானியாவில் இந்த வாரம் வாகன ஓட்டுநர் சோதனை தேர்விற்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்வு சோதனைகளின் போது தேர்வாளர்களின் உடல்களில் கமராக்களை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25 ஆம் திகதி முதல், புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. அது தேர்வின் போது தேர்வாளர்களை, பயிலும் ஓட்டுநர்களை தாக்குவதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஓட்டுநர் சோதனையின் 1,702  தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன.

புதிய விதிகள் அமலில் இருப்பதால், ஓட்டுநர் பரிசோதகரை வாய்மொழியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ தாக்கும் மாணவர்கள் தங்கள் பதிவேடுகளைக் குறிக்க இலகுவாக உள்ளது.

தங்களுக்கு இரண்டு தேர்வாளர்கள் தேவைப்பாடு இருப்பதாகக் கருதினால் எதிர்கால சோதனையைப் பெற அதிக நேரம் எடுக்கும். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இனிமேல் துஷ்பிரயோகம் அதிகரிப்பதைச் சமாளிக்க உதவும் வகையில், ஓட்டுநர் தேர்வாளர்கள் உடலில் கமராக்களை அணியத் தொடங்குவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

தொற்றுநோய் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சோதனை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஓட்டுநர் தேர்வாளர்களுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை மற்றும் தவறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மிக சமீபத்திய புள்ளிவிவரங்களில் துஷ்பிரயோக சம்பவங்கள் குறைந்துவிட்டதாகக் காட்டினாலும், அவை தொற்றுநோய்க்கு முன்பை விட அதிகமாக உள்ளதக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!