மருதானை சத்தியாக்கிரகம் கலைக்கப்பட்டது - 4 பேர் பொலிஸ் காவலில்

#Police #Colombo #Arrest
Prathees
3 years ago
மருதானை சத்தியாக்கிரகம் கலைக்கப்பட்டது - 4 பேர் பொலிஸ் காவலில்

கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக நடைபெற்ற சத்தியாக்கிரகத்தை கண்ணீர் புகை தாக்குதல்களை பயன்படுத்தி. கலைக்க பொலிஸார் நேற்று இரவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை புறக்கணித்து சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எந்தவொரு குழுவும் வன்முறையாக நடந்து கொண்டால், பொலிசார் தமக்குக் கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4