முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

Mani
1 year ago
முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு

பாஜகவின் தீவிர அனுதாபியாக அறியப்படும் யோகா குரு பாபா ராம்தேவ் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். அதுபோல தற்போது ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்துமத மாநாட்டில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அவர் பேசுகையில் நீங்கள் ஒரு முஸ்லிமை அழைத்து உங்கள் மதம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள் அதற்கு அவர்கள் தங்கள் மதம் ஐந்து முறை நமாஸ் தொழுகை செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கூறுவார்கள் அது இந்து பெண்களை கடத்துவதாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பாவச் செயலை செய்வதாகவும் இருக்கலாம் என பல முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறினாலும் நமாஸ் செய்வதை மறப்பதில்லை என்றும் கிறிஸ்தவர்கள் பிற மதத்தை சார்ந்த அனைவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்கள் பாவங்களை செய்துவிட்டு  வேதாளயத்தில் இயேசுவின் சிலைக்கு முன்னால் நின்று கொண்டு அவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்வார்கள் முஸ்லிம்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி மற்றவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றுவதையே வேலையாக வைத்துள்ளனர். ஒரு கும்பல் இந்த உலகத்தையே கிறிஸ்துவத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இன்னொரு கும்பல் இந்த உலகையே இஸ்லாத்திற்கு மாற்ற வேண்டும் என விரும்புகின்றனர் இவ்வாறு பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!