தனித் தமிழ் பேசாத போது ஏன் நாடு? ஈழத்தில் நாம் வாழ்கிறோம் தான். ஆனாலும் அது நம் நாடு தானா? இன்றைய கவிதை 07-02-2023.
#Poems
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

தனித் தமிழ் பேசாத
போது ஏன் நாடு?
********************************
ஈழத்தில் நாம்
வாழ்கிறோம் தான்.
ஆனாலும் அது
நம் நாடு தானா?
நிச்சயமாக இல்லை.
நாம் வாழ்ந்த பூமி.
அவ்வளவே தான்.
நிலை மாறியது ஏன்?
தனி நாடு கேட்டு
போரிட்டோமே தவிர
அதற்காக அது போல்
வாழ்ந்தோமா நாம்?
மொழியில் நாம்
தனித் தமிழ் தான்
பேசி வாழ்கிறோமா?
பல மொழி கலவை.
மாற்றங்கள் இங்கே
நமக்குள் முதலில்
வந்து நின்றாகத் தான்
நின்றாகிட வேண்டும்.
அப்போது பாருங்கள்
எல்லாம் தானே
நல்ல படி மாறும்.
இல்லை தோல்விதான்.
தமிழர் துன்பியலை
துடைத்தொழிக்க யார்
வந்த போதும் இல்லை
நல்ல மாற்றம் காண்போமா?
சட்டங்கள் கொண்டு
சர்வதேசம் ஏற்று
போகும் ஒரு மாற்றம்
இனியாகும் வருமா?
இல்லை ஆகும்
இதுபோல் நல்ல
முயற்சிக்கும் தடை
தடுத்திட முடியாதே!
........ அன்புடன் நதுநசி



