துருக்கிய நிலநடுக்கத்தில் 3700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: இழப்புக்கள் 8 மடங்கு அதிகரிக்கலாம் என்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்

#Lanka4 #sri lanka tamil news #Death #Earthquake
Prathees
3 years ago
துருக்கிய நிலநடுக்கத்தில் 3700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: இழப்புக்கள் 8 மடங்கு அதிகரிக்கலாம் என்கிறது  உலக சுகாதார ஸ்தாபனம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,700ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் 2,300 பேரும், சிரியாவில் 1,444 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளிலும் 15,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (06) அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் காரணமாக துருக்கி - சிரிய எல்லையில் உள்ள பல நகரங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சாலை நீர்ப்பாசனங்கள் மற்றும் எரிவாயு குழாய்களும் வெடித்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 மடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4