உலகம் முழுக்க எரிபொருளை விநியோகம் செய்யும் இலங்கைத் தமிழ் தம்பதி

#world_news #London #Britain #Fuel #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
1 year ago
உலகம் முழுக்க எரிபொருளை விநியோகம்  செய்யும் இலங்கைத்  தமிழ் தம்பதி

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களான  சஞ்சீவ்குமார்  ஆரணி தம்பதிகள்   பெரும் எரிபொருள் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி, உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிறார்கள். 

மசகு எண்ணையைச் சுத்திகரித்து ( Crude oil refinery ) டீசல், பெற்றோல், மண்ணெண்ணை போன்றவற்றை பிரித்தெடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதாக்கும்.

பிரித்தானியா முழுவதிலும் இருக்கும் அநேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஒரு சில பெரும் வர்த்தகர்களிடம் 10 தொடக்கம் 20 வரையான எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உண்டு. 

 இந்நிலையில் இந்த தம்பதிகள் பிரித்தானியாவின் Killingholme எனும் இடத்தில் உள்ள Lindsey Oil Refinery எனும் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தையே வாங்குமளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். 

பிரித்தானியாவில் மொத்தமாக ஆறு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. Stanlow, Grangemouth, Humber, Pembroke, Prax Lindsey மற்றும் Fawley ஆகியவையே அவையாகும். இதில் யாழ்ப்பாணத்து தமிழன் சஞ்சீவ்குமாரின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் Prax Lindsey என்பதாகும். 

2021 ஆண்டுவரை பிரான்சின் பிரபல எரிபொருள் நிறுவனமாகிய Total இன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சுத்திகரிப்பு நிலையம் இப்போது ஒரு தமிழனின் கையில் உள்ளது.

1999 ஆம் ஆண்டில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை, குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்திய இந்தத் தம்பதியினர், இன்று நாள்தோறும் 113,000 பரல்கள் எரிபொருளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறார்கள். இவர்களின் Turn over £8.6 billion ஆகும். 

ஈழத்தமிழர்களின் பொருளாதார பலம் அளப்பரியது. அவர்களின் உழைப்பும், முயற்சிகளும் வியப்புக்குரியவை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!