துருக்கி மட்டுமா துயரில் விழுந்தது? துயர் வந்து  இங்கே எல்லா மனங்களையும் வதைத்துப் போகும். அழுதிடுவோம் நாம். இன்றைய கவிதை 09-02-2023.

#கவிதை #துருக்கி #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Turkey #today #information #Lanka4
துருக்கி மட்டுமா துயரில் விழுந்தது? துயர் வந்து  இங்கே எல்லா மனங்களையும் வதைத்துப் போகும். அழுதிடுவோம் நாம். இன்றைய கவிதை 09-02-2023.

துருக்கி மட்டுமா
துயரில் விழுந்தது?
+++++++++++++++++++

துயர் வந்து  இங்கே
எல்லா மனங்களையும்
வதைத்துப் போகும்.
அழுதிடுவோம் நாம்.

நிலம் நடுங்கி
மனம் பதைத்திட
ஒரு நிலை ஆனது.
துருக்கி சிரியாவில்.

ஈழத்திலும் இப்படி
ஒரு நிலை கண்டோம்.
ஈழத்தில் செயற்கை
அழிவென்று புரியாதோ?

கொன்று குவித்தது
இரக்கமற்று வென்றோம்
கொண்டாடி மகிழ
உலகம் துணையானது.

துருக்கியில் இயற்கை
நடந்தது தானே!
இரங்கி இன்று
கூடி உதவிடும் உலகு.

எமை நினைத்து நாம்
அழுவதோ?- இல்லை
நிலம் நடுங்கிட அவர்
துயர் கண்டு அழுவதோ?

நிலை கண்டு 
மனம் நொந்தது.
வருந்தி நிற்கும்
போது உணர்ந்தது.

பேரனர்த்தம் அது.
அழுது புலம்பி
ஒப்பாரி பாடி
கவலை சொன்னோம்.

பயன் என்னவோ?
பாவம் துருக்கியர்.
சிரிய மக்களும் தான்.
போர்கள் கடந்தன.

ஈழத்தில் தமிழர்
வெந்து செத்தனர்.
கொன்று போட்டு
வென்று நின்றனர்.

ஏன் என கேட்டு
அழிவு தடுத்து
விடிவு தர மறந்து
உலகம் சிரித்தது.

ஐநா கூட தன்
மூட்டை கட்டி
வீடு திரும்பியது.
தமிழரை அழிய விட்டு.

தமிழ் மக்கள்
உயிர் சுமந்த
உடலில் உணர்வு
இல்லையோ சொல்லும்.

இன்று காணும்
நிலநடுக்கத்து நிலை
பரிதாபம் அன்றோ?
மனம் கலங்கிடுதே!

ஓடு வந்து உதவிட
எத்தனை நாடுகள்.
பேரழிவு என்று
உரைத்து நின்று.

நாற்பதாயிரம் ஒரு
எண்ணிக்கை எனின்
நூற்றி நாற்பதாயிரம்
தொகையன்றோ?....

சேர்ந்து கொன்ற
உலகில் இன்று
கண்டேன் அழிவு
எப்படி நோக்கிட.

தமிழக தமிழர்
என்ன கோபம்
கண்டு நின்றார்
கொன்று போடும்வரை.

இன்று எப்படி
உலக மக்கள்
இறக்கத் துடித்து
உரக்க அழுகிறார்.

துருக்கி பாவம் தான்.
இலங்கையில் தமிழர்
நாமும் பாவம் தான்.
புரிந்திட மாட்டாரோ?

இப்போது சொன்னால்
உங்கள் எண்ணங்கள்
விட்ட தவறை உணரும்.
நாளை நம் துயர் மாறும்.

எமக்கும் உணர்வு
இருக்கும் பாரும்.
நாமும் உயிரோடு 
வாழும் மனிதர் தானே!

நிலம் பறித்து
வளம் அழித்து
பிழைக்கும் வழி
தொலைந்தால் நாம்.

அதை தடுத்து எமை
காத்து வாழ வைத்து
போக வேண்டிய 
அரசே கொன்றால்?

கொலைக்கு தூபம் இட்டு
அதை தூண்டி விட்டு
கொடுப்புக்குள் சிரித்தால்
திருப்பி அடித்தோம்.தவறா?

கொல்ல வந்த பசுவை
கொல்லல் தர்மம் என்றால்
தவறாக சென்றும்
தர்மம் காக்கலாம் என்றால்

நம்மை நாம் காத்திட
ஆயுதம் ஏந்தியது தவறோ?
தனி நாடு கேட்டா நாம்
வாழ்ந்தோம் அன்று.

சேர்ந்து வாழ
வந்த தமிழரை
ஒழித்து வாழ
நினைத்தது ஏனோ?

அடித்தவரை அன்று
உலக ஒழுங்கு
காத்து போனது.
நாம் செத்து பிழைக்க.

இன்று கூட இல்லை
நிரந்தர தீர்வு.
நாளை கூட இங்கே
நிலைமை மாறலாம்.

அமைதி ஒன்று
நிலையாக நின்று
வாழ்ந்தால் என்ன
கேடு சொல்லும்.

துருக்கி துயரில்
உருகி சொல்கிறேன்.
இன்னுமொரு அழிவு
இலங்கையில் வேண்டாம்.

.                                                                                                                        ....... அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!