மிச்சம் கொண்டு எப்படி உதவிட மனம் வரும்? தெரிந்து கொள்ள தெரியாத ஒன்று இருக்கிறது.... இன்றைய கவிதை 10-02-2023.

#கவிதை #தத்துவம் #மனம் #இன்று #லங்கா4 #Poems #Mind #today #information #Lanka4
மிச்சம் கொண்டு எப்படி உதவிட மனம் வரும்? தெரிந்து கொள்ள தெரியாத ஒன்று இருக்கிறது.... இன்றைய கவிதை 10-02-2023.

மிச்சம் கொண்டு எப்படி
உதவிட மனம் வரும்?
=========================

தெரிந்து கொள்ள
தெரியாத ஒன்று
இருக்கிறது இங்கே!
கண்டு கொண்டேன்.

தேடி வந்து உதவி
செய்திட துணிந்தால்
தேவை என்ன என்று
தேடிடச் சொல்கிறது.

மோசடி செய்து ஒரு
ஏமாற்றுக் கூட்டம்
ஏழை உழைப்பை
சுரண்டுகிறது இங்கே.

சித்தம் உழைத்து
சுத்தம் தேடும் போது
வாழும் இடமும் குப்பை.
எப்படி வாழ்வாரோ?

நானும் ஒரு ஏழை
போல இருந்து தான்
பணம் தேடிட போராடி
படியேறி பயணமானேன்.

வெற்றி ஒன்று தான்
இலக்கு என்றேன்.
வென்று நின்றேன்
வறுமை தொலைத்து.

இந்த நாட்டில் கூட
ஏழை பாவம் என்று
இரங்கிக் கொண்டு
நின்று என்ன பயன்.

ஏழை தன் நிலை
மாற்றிடப் போராடாது
மாறிடப் போவதில்லை
எந்த வறுமையும் இங்கே!

உதவிட ஆசை 
இருந்திட்ட போதும்
உதவிடும் முறையில்
இல்லை உடன் பாடு.

அம்மா கூலிக்கு வேலை.
பச்சிளம் பிள்ளை தன்
மனதில் ஒரு காதலோடு.
செலவுக்கு வழி தேடி.

திட்டம் போட்டு தன்
உழைப்பை நாம்
மிச்சம் கண்டு கொடுக்க
அது வீணே போகிறது?

மாடி வீடு கட்டும்
குடும்பத்து பிள்ளைக்கு
படிக்க காசில்லையாம்.
எப்படி நம்பிட இப்போது?

அண்ணா வெளிநாடு.
மாமா கனடா என்று
மார்தட்டும் ஒரு பிள்ளை
பிச்சை எடுக்கிறது உண்ண.

நல்ல வீடு இல்லை
நலம் வாழ்ந்திடப் பார்.
கையில் இரு கைப்பேசி
வீட்டில் எல்லோரிடமும்.

வெளிநாட்டு காசு அது
என்ன சும்மாவா?
அக்கறையும் இரக்கமும்
இதை ஏன் தேடியதில்லை.

இந்த சிந்தனை
விட்டு கொஞ்சம் மாறி
மெய்யாக மாறும்
நல்ல மாற்றம் சிந்தி.

                                                                                                                            ........ அன்புடன் நதுநசி

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!