நெட்டிசன்களால் பங்கமாய் கலாய்க்கப்பட்ட பிக் பாஸ் அசீம்
பிக் பாஸ் அசீம் பதிவிட்ட ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் அசீம். இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அசீம் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அசீம் சக நடிகை ஷிவானி நாராயணனுடன் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.சீரியலை தொடர்ந்த அசிம், பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். சேர்ந்த நாளில் இருந்தே சக பங்கேற்பாளர்களை அவதூறாக பேசி, அவர்களுடன் தகராறு செய்து, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, டாஸ்க்கை சரியாக செய்யாமல், பிரச்னையை ஏற்படுத்தி நாசமாக்கினார் அசீம்.
இதனால் அவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, வரும் காலங்களில் போட்டியாளர்கள் சண்டையிடுவதிலும், சக போட்டியாளர்களை விட தாழ்வாக நடந்து கொள்வதிலும் கவனம் செலுத்துவார்கள் என்று சிலர் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சக போட்டியாளர்களிடம் சமூக வலைதளம் மூலம் மல்லுக்கட்டி வருகிறார் அசீம். அந்த வகையில் சக போட்டியாளர் ஒருவரை மறைமுகமாக தாக்கியுள்ள அசீம், நீங்கள் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுப்பதற்கு முன் அதை யார் ஆரம்பித்தார்கள் என்று பாருங்கள், உங்கள் வேண்டியவர்கள் குற்றம்சாட்டினல் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். ஆனால் அது உங்களிடம் வரும்போது நீங்கள் வெளியேறுவீர்கள். Common Dude Grow up BiggBossTamil முடிந்தது. எனது அப்கம்மிங் படங்களில் நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள், பிக்பாஸால் கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அசீம்மை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தி கிரேட் இந்தியன் கிச்சனில் கணவன் வேடத்தில் நடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக பில்டப் பெற்றவர் என்றும், சொந்தமாக பேட்டி கொடுக்கக் கூட அவருக்குத் தெரியாது என்றும் சிலர் கூறுகிறார்கள். அசீம் தனது பல படங்களில் நகைச்சுவை நிவாரணமாக நடித்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
மேலும் அசீம்மின் டிவிட்டில் உள்ள தவறுகளையும் குறிப்பிட்டு இவர் என்ன இப்படி இங்கிலிஷை பிய்தது குதறி போட்டிருக்கிறார் என்றும் கலாய்த்துள்ளனர். மேலும் பல நெட்டிசன்கள் பிஸின்னு சும்மாதானே சொல்றீங்க என்றும் கலாய்த்துள்ளனர். அசீம் ஒரு டிவிட்டை பதிவிட்டு ட்ரோல் புராடெக்ட் ஆகியுள்ளார். பலரும் அவரது பதிவை கிண்டலடித்து, சிரிக்கும் ஈமோஜிகளை ஷேர் செய்து வருகின்றனர்.