1வது டெஸ்ட், முதல் நாள்: ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸி.யை வீழ்த்தியதால் இந்தியா முதலிடத்தில் உள்ளது

Mani
1 year ago
1வது டெஸ்ட், முதல் நாள்: ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸி.யை வீழ்த்தியதால் இந்தியா முதலிடத்தில் உள்ளது

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்க் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதில் முதல் போட்டியாளராக பேட்டிங் செய்த டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களம் இறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். வாரனர் ஷமியின் பந்துவீச்சில் போல்ட்கி வெளியேறினார்.

ஆட்டத்தில் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணியை ஸ்மித்தும், லபுஷேனும் ஆட்டத்தை இழக்காமல் ரன்களை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். சிறப்பாக விளையாடிய 
லபுஷேன் 49 ரன்கள், ஸ்மித் 37 ரன்கள் எடுத்து சடேஜா பந்து வீச்சில் ஆட்டத்தை இழந்தனர்.


பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த போட்டியாளர் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். இவர் 36 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.

பின்னர் வந்த பேட் கம்மின்ஸ், 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து ஆடி பின்னர் 31 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இழந்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியில் முதல் போட்டியாளராக கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர்  களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்து இருக்கிறது. ரோகித் 56 ரன்களுடன் அடுத்ததாக இறங்கிய அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!