புத்தி கொண்டு உழைத்திடு. காசைக் கொண்டு காசை ஆக்கும் ஆசை வேண்டும். வேசம் கலைந்திடும். இன்றைய கவிதை 11-02-2023

#கவிதை #உழை #பணம் #தகவல் #லங்கா4 #Poems #work #money #information #Lanka4
புத்தி கொண்டு உழைத்திடு. காசைக் கொண்டு காசை ஆக்கும் ஆசை வேண்டும். வேசம் கலைந்திடும். இன்றைய கவிதை 11-02-2023

புத்தி கொண்டு உழைதிடு
=============================

காசைக் கொண்டு
காசை ஆக்கும்
ஆசை வேண்டும்.
வேசம் கலைந்திடும்.

தோசம் என்று 
தேசம் விட்டு ஓடி
பாசம் விட்டு பின்
ஏங்கிக் கிடப்பதோ?

புத்தி கொண்டு
வாழப் பழகி
கடினம் கடந்து
வெல்லக் கூடும்.

தப்பு எல்லாம் 
அறிந்து நடக்க
துப்புத் துலக்கும்
பழக்கம் வேண்டும்.

சிறுகத் தானும் 
முதலில் முயன்று
முடியும் வரை
உழைப்பு வேண்டும்.

உடல் உழைப்பு
இல்லாது நீ
எங்கேயும் வாழ 
உன்னால் முடியாதே!

                                                                                                              ........ அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!