'உலகிலேயே இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது'-நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Mani
3 years ago
'உலகிலேயே இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது'-நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசிய போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மூலதன செலவு அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான தேவை ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பை அதிகரிக்க சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவிலேயே இந்தியா அதிவேக பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது.

மேலும் வரும் ஆண்டு அதிவேகமாக பொருளாதார வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதில் வேலைவாய்ப்பு, வரிவிதிப்பு ஆகிய தொடர்பான எண்ணற்ற பலன்களை பட்ஜெட் கொடுக்கிறது என்று குறிப்பிட்டு பட்டியலிட்டு பட்ஜெட் விவாதம் தொடர்பான பதிலுரையில் நிர்மலா சீதாராமன்  பேசினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4