எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க, லியோ படத்தின் அப்டேட்டை கொடுத்த லொகேஷின் நண்பன்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார், லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி உள்ளதை உறுதிப்படுத்தியதுடன் மொத்த ஸ்கிரிப்ட்டையும் பற்றி உடைத்து பேசி இருக்கிறார்.
லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி கொடைக்கானலில் தொடர்ந்த நிலையில், அடுத்த கட்டமாக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக படக்குழுவினர் தனி விமானத்தின் மூலம் புறப்பட்டு சென்றனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படத்தின் டைட்டில் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் விவரத்தை அண்மையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி காஷ்மீரில் நடக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
இந்த சூழலில் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் இயக்குனர் ரத்னகுமார் அளித்திருக்கும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்தை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் மேலும் அதிகரிக்க வைத்திருக்கிறார். ஏனென்றால் லியோ படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே தரும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது சென்னையில் இருக்கும் ரத்னகுமார் இன்னும் மூன்று நாட்களில் காஷ்மீருக்கு செல்கிறார். மேலும் இந்த படத்திற்கு லியோ என்று ஆங்கிலத்தில் டைட்டில் வைத்திருப்பது எதற்கு என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரத்னகுமார், லியோ படத்தை பான் இந்தியா படமாக உருவாக்குவதால் எல்லா மொழிகளிலும் டைட்டில் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவே லியோ என்றும் தேர்வு செய்துள்ளனராம்.
எனவே இன்னும் மூன்று நாட்களில் காஷ்மீர் பயணம் மேற்கொள்ள இருக்கும் ரத்னகுமார் லியோ படத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களிலும் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களில் வசனங்கள் அனைத்தும் தாறுமாறாக இருந்த நிலையில் லியோ படத்திற்கும் ரத்னகுமார் சிறப்பாக வசனம் எழுதுவார் என்பதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.