இசைவாயோ இனித்திட.. சண்டை இல்லை இங்கே இப்போது நானும் நீயும் சமாதானம் என்போம். இன்றைய கவிதை 13-02-2023.
#கவிதை
#சமாதானம்
#தகவல்
#இன்று
#லங்கா4
#Poems
#Peace
#information
#today
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

இசைவாயோ இனித்திட
***************************************
சண்டை இல்லை
இங்கே இப்போது
நானும் நீயும்
சமாதானம் என்போம்.
பேச்சில் வாழும்
போது தெரியும்.
உண்மை உள்ளம்
முகத்தில் தெரியும்.
உடன்பாடு நிரந்தரம்
என் துயர் போக
உன் உழைப்பும்
தந்து போக சித்தமா?
உன் துயர் போக
என் உழைப்பு
தந்திடும் வகை
நடந்திட முடியுமா?
பொருந்திப் போக
இசைந்து நடந்திடு.
உன்னால் எனக்கு
இல்லை தொல்லை.
அப்படி இருந்தால்
என்னால் இல்லை
உனக்கும் தொல்லை.
அமைதி விளையாடும்.
........ அன்புடன் நதுநசி.



