ஏகே 62 படத்திற்காக அஜித்தை திருப்தி படுத்த புது ரூட்டை கையில் எடுத்த மகிழ் திருமேனி

#Cinema #TamilCinema #Tamil #Tamilnews #Lanka4
Kanimoli
1 year ago
ஏகே 62 படத்திற்காக அஜித்தை திருப்தி படுத்த புது ரூட்டை கையில் எடுத்த மகிழ் திருமேனி

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏகே 62 படத்திற்கான அறிவிப்புகள் எப்பொழுது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்திற்கான இயக்குனர் யார் என்று பெரிய குழப்பம் இருந்தன. ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்தின் இயக்குனராக மகிழ் திருமேனி உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அஜித், துணிவு படத்தின் வெற்றியை பார்த்த பிறகு இதை விட ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் இருந்து வருகிறார். அதற்காகத்தான் இவ்வளவு மெனக்கிடுகிறார். இதனை தொடர்ந்து அஜித் எதிர்பார்ப்பது ஏகே 62 படத்தில் ஆக்சன் சீக்வன்ஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் இந்தப் படத்தையும் எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செய்து வருகிறார். இதற்காக அவர் சொன்ன முதல் விஷயம் ஏகே 62 படம் மார்ச் முதல் வாரத்திலேயே ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான். இதனை அறிந்த மற்ற இயக்குனர்கள் அனைவரும் இழுத்தடிப்பது போல் தெரிந்தது.

அதனால் இப்பொழுது இயக்குனர் மகில் திருமேனியை தேர்வு செய்து இருக்கிறார். ஏனென்றால் இவர் மட்டும்தான் அஜித் சொன்ன எல்லாத்துக்கும் ஓகே சொல்லி இருக்கிறார். இதனால் கூடிய சீக்கிரத்திலேயே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக மகிழ் திருமேனி களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இவருக்கு இன்னும் லைக்கா ஆபீஸ் கூட போட்டு தரவில்லை. ஆனால் மகிழ் திருமேனி அதற்காக காத்திருக்கக் கூடாது என்று முடிவு செய்து புது ரூட்டை கையில் எடுத்திருக்கிறார். அதாவது ஆபீஸ் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று நினைத்து அஜித்தை திருப்தி படுத்துவதற்காக அவரது ஆபீஸ்க்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.

இந்த மாதிரி டெடிகேஷனாக வேலை பார்ப்பது அஜித்திற்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அஜித் நினைத்தபடி ஏகே 62 படத்தை கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சீக்வன்ஸ் கதையாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!