பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நடப்பு ஆண்டில் அடுத்த சுற்று பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல்
#Facebook
#Instagram
#Twitter
#Tech
#technology
#Lanka4
Kanimoli
2 years ago

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்தாண்டு 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், நடப்பு ஆண்டிலும் அடுத்த சுற்று பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவு-செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மேலும் சில ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்யலாமென முன்னணி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
புதிய பணிநீக்கங்கள் தொடர்பாக மெட்டா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும், மேலாளர் உட்பட ஒரு சில பணியில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



