திங்கள் முன்னே! நெல் விதைத்து அறுத்து வந்து வீதியில் போட்டு வைத்தார் இன்று. இன்றைய கவிதை 14-02-2023
#கவிதை
#அறுவடை
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Paddy
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

திங்கள் முன்னே!
*****************************
நெல் விதைத்து
அறுத்து வந்து
வீதியில் போட்டு
வைத்தார் இன்று.
காய்ந்து போக
அள்ளி மூட்டை
கட்டி விற்க
நினைத்து தோற்றார்.
விதைத்த முதல்
விற்றுக் கிடைக்காது.
எண்ணி அவர்
நொந்து போனார்.
திங்கள் முன்னே
திட்டம் பின்னே
வாழ்தல் கடினம்.
மறந்து போனார்.
தோற்றோம் என்று
புரியும் முன்னே
கடன் வந்து
தொண்டை நெரித்தது.
இந்த அனுபவம்
கொண்டு நித்தம்
வாழ்ந்து போனால்
சுற்றம் நலமாகுமே!
. ....... அன்புடன் நதுநசி.



