அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியை சேர்ந்த ஒய்ன் மோகன்

#Cricket #Tamilnews #Lanka4 #England #Retire #Player
Prasu
1 year ago
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியை சேர்ந்த ஒய்ன் மோகன்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2019இல் உலக சம்பியனான இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த ஒய்ன் மோகன் அனைத்து விதமான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக திங்கட்கிழமை (13) அறிவித்துள்ளார்.

முதலில் அயர்லாந்துக்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் மொத்தமாக 16 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த 36 வயதான ஒய்ன் மோர்கன் கடந்த வருடம் சகலவிதமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் குறைந்த ஓவர்களைக் கொண்ட தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் ஈடுபட்டுவந்தார்.

இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணியின் தலைவராக கடந்த வருடம் விளையாடிய ஒய்ன் மோர்கன், அவ்வணியை நீக்கல் சுற்றுவரை வழிநடத்தியிருந்தார்.

அத்துடன் அபு தாபி ரி10 கிரிக்கெட் போட்டியில் உப சம்பியனான நியூ யோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் ஒய்ன் மோர்கன் இடம்பெற்றார்.

தென் ஆபிரிக்காவில் அண்மையில் நிறைவடைந்த SA20 கிரிக்கெட் போட்டியில் பார்ள் றோயல்ஸ் அணிக்காக கடைசியாக அவர் விளையாடியிருந்தார்.

பங்களாதேஷுக்கு எதிராக 2010இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகமான அவர், 2012இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

16 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 700 ஓட்டங்களையும் 248 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 சதங்கள், 47 அரைச் சதங்களுடன் 7701 ஓட்டங்களையும் 115 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 14 அரைச் சதங்களுடன் 2458 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் பெற்றுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!