ஒரு மணி நடத்தல் என்பது ஒரு அற்புதமான உடற்பயிற்சி என்பதை இப்படி நீங்கள் அனுபவிக்கலாம்.
#ஆரோக்கியம்
#நடத்தல்
#உடற்பயிற்சி
#லங்கா4
#தகவல்
#Health
#walk
#Lanka4
#Body
#function
Mugunthan Mugunthan
1 year ago
வாசிப்பு மனிதனை ஒரு முழு மனிதனாக்குவது போல் நடப்பது ஒரு மனிதனை அற்புத மனிதனாக்கிறது.
ஆம், நடக்க நடக்க நமக்குள் நடக்கும் அற்புதங்கள் அனைத்தும் ஆதாரபூர்வ அறிவியல் உண்மைகள்! இவை எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நாம் இனி காணலாம்.
.
- நடக்கத் தொடங்கிய முதலாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது!
- அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன் அருவி போல் குருதி பரவுகிறது!
- மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம் முற்றிலுமாகத் தளர்கிறது!
- நான்காம் நிமிடத்தில் நடை மிக எளிதாகிறது... நாடி சீராகிறது!
- ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது... யாரும் அறியாமலே!
- ஆறாம் நிமிடத்திலேயே அவசியமற்ற கொழுப்பு நீக்கம் ஆரம்பம் ஆகிறது!
- ஏழாம் நிமிடத்தில் இதயத் துடிப்பு சீராகி... இன்னிசை ஆகிறது!
- நிமிடம் எட்டில் நாளங்கள் அனைத்தும் நெகிழ்ந்து விரிகின்றன!
- ஒன்பதாம் நிமிடத்தில் உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது!
- பத்தாம் நிமிடத்தில் மொத்த உடலும் மனமும்... சுத்தமாகித் தெளிகிறது!
- பனிரெண்டாம் நிமிடத்தில் பரவுகிறது உடலெங்கும் ஓர் பதமான சூடும் சுகமும்!
- பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...
- பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!
- நிமிடம் பதினெட்டில் நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...நிகரில்லா உயிர்வளி!
- இருபதாம் நிமிடத்தில் இதுவரை கரையாமல் இறுகிய கொழுப்பும்... இளகத் தொடங்குகிறது!
- இருபத்தைந்தாம் நிமிடத்தில் இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்? என்று மனம் வியக்கிறது!
- முப்பதாம் நிமிடத்தில் முழு உடலும் மனமும் முற்றிலுமாகத் தளர்கின்றன!
- முப்பந்தைந்தாம் நிமிடத்தில் மூளையின் மூலை முடுக்கெங்கும் முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள்!
- நாற்பதாம் நிமிடத்தில் நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம் நமக்கே தெரியாமல் விலகுகிறது.
- நாற்பத்தைந்தாம் நிமிடத்தில் நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து நம்மை ஆட்கொள்கிறது.
- ஐம்பதாம் நிமிடத்தில் ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும். நிமிடம்
- ஐம்பத்தைந்தில் நினைத்துப் பார்க்க முடியாத நிம்மதி நெஞ்சில் நிறைகிறது.
- அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல் அனைத்தும் உங்களுக்குள்.
நீங்கள் உங்களுக்காக ஒதுக்கும் இந்த ஒரு மணி நேரம் எப்படி அற்புதமானது. நடக்க நடக்க நீங்கள் புத்துணர்ச்சியடைவதோடு உடலில் ஏற்படும் விந்தைகளோ ஆயிரம்.