நிதி அமைச்சுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ள முக்கிய சந்திப்பு!

#SriLanka #Sri Lanka President #Election #Election Commission #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
நிதி அமைச்சுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ள முக்கிய சந்திப்பு!

நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4