லவ் டுடே படத்தை எடுத்ததற்காக பத்து வருடம் கழித்து பிரதீப் வருத்தப்படுவார் என நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

#Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
லவ் டுடே படத்தை எடுத்ததற்காக பத்து வருடம் கழித்து பிரதீப் வருத்தப்படுவார் என நடிகர் ஒருவர் கூறியுள்ளார்

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் இயக்கி நடித்து கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. இப்போதைய காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படையாக இந்த படம் காட்டு இருந்தது.

ஆரம்பத்தில் பிரதீப் இந்த கதையை வைத்துக்கொண்டு பல தயாரிப்பாளர்களை தேடிச் சென்றுள்ளார். ஆனால் யாருமே இந்த படத்தை தயாரிக்க முன் வரவில்லை. அதன்பின்பு ஏஜிஎஸ் நிறுவனம் தான் லவ் டுடே படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்தது. கடைசியில் படம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டு அடித்து வசூல் வேட்டையாடி இருந்தது.

மேலும் மிக கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இவ்வளவு வசூல் செய்ய காரணம் என்னவென்றால் இப்போது உள்ள காதலை முழுக்க முழுக்க நகைச்சுவையாக பிரதீப் சொல்லியிருந்தார். இந்நிலையில் நடிகர் ஒருவர் 10 வருடம் கழித்து பிரதீப் இந்த படத்தை இயக்கியதை நினைத்து வருத்தப்படுவார் என கூறியுள்ளார். 

அதாவது பிரபல பாடகியான சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார். இவர் பல படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்திருப்பார். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து.

அப்போது லவ் டுடே படத்தில் ஆண்களை பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக பெண்களை பல காட்சிகளில் இழிவு படுத்தி இருப்பார்கள். மேலும் இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில மொழிகளில் டப் செய்து வெளியான போது பல சர்ச்சைகள் எழுந்தது.

காதலில் பெண்களை மட்டும் தவறான பிம்பம் காட்டுவது தப்பு. இன்னும் பத்து வருடங்கள் ஆனால் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். அப்போது நாம இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என்று பிரதீப் வருத்தப்படுவார் என கார்த்திக் கூறி உள்ளார். சினிமா என்பது பொழுதுபோக்கான விஷயம் என்றாலும் அதில் ஒருவரை தாழ்த்தியும் ஒருவரை உயர்த்தியும் சொல்வதற்காக சில கட்டுக்கதையான விஷயங்கள் எடுப்பது மிகவும் முரணானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!