காது வலியால் அவதிபட்டவர் திடீரென உயிரிழப்பு - வைத்தியர்களின் தவறால் நேர்ந்ததா?

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
காது வலியால் அவதிபட்டவர் திடீரென உயிரிழப்பு - வைத்தியர்களின் தவறால் நேர்ந்ததா?

காதில் ஏற்பட்ட கடுமையான வலியை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் வைத்தியசாலையின் தகவறின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என்பவர் கடந்த 23ஆம் திகதி காதில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (ENT) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடந்த  வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்தார்.

 வைத்தியர்களின் தவறினாலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

 இம் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!