இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கணக்கை முடக்கிய மக்கள் வங்கி: எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

#SriLanka #Sri Lanka President #Fuel #People's Bank #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கணக்கை முடக்கிய மக்கள் வங்கி: எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நேற்று (14) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தப்பட்ட போதிலும் பிரிவினையாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் வங்கியின் தலைவருக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆட்சி அதிகாரத்துக்கும் தெரியப்படுத்தி தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கியின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்ரகமுவ பிராந்திய முகாமையாளர் விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4