உலக அழகி ஐஸ்வர்யா ராயை காதலிப்பதாக பாடாய்படுத்திய பிரபல நடிகர்

#Actor #Actress #Lanka4
Kanimoli
1 year ago
உலக அழகி ஐஸ்வர்யா ராயை காதலிப்பதாக பாடாய்படுத்திய   பிரபல நடிகர்

உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் இருவர் படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். அதன் பின்பு தமிழில் சூப்பர் ஹிட் படங்கள் கொடுக்க பாலிவுட்டிலும் எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்தது. அதன் பிறகு தமிழ் படங்களை காட்டிலும் அதிகம் ஹிந்தி படங்களிலேயே ஐஸ்வர்யா கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நந்தினி கதாபாத்திரம் பெரிய அளவு வரவேற்கப்பட்டது.

மேலும் ஐஸ்வர்யா ராயை பிடிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். அழகும், பதுமையும் உடைய அவரது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் நடிகரால் மிகுந்த காதல் சித்திரவதை ஐஸ்வர்யா ராய் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். இதன் மூலம் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஐஸ்வர்யா ராயை முழு கட்டுப்பாட்டுக்குள் சல்மான் கான் வைத்திருந்தாராம்.

அதாவது ஐஸ்வர்யா ராய் யாருடன் பேச வேண்டும், எந்த படத்தில் நடிக்க வேண்டும் என எல்லா விஷயத்தையும் சல்மான் கான் தான் முடிவெடுத்து வந்தாராம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் சில காலம் படங்களில் நடிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். அப்போதும் அவரின் வீட்டு முன் வந்து சல்மான் கான் பிரச்சனை செய்திருந்தாராம்.

கடைசியாக சல்மான் கான் பிடியிலிருந்து தப்பித்த ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை காதலித்த கரம் பிடித்தார். இந்த தம்பதியினருக்கு அழகான மகள் ஒருவர் உள்ளார். உலக அழகியாக இருப்பது மிகப்பெரிய அந்தஸ்தாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராயும் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!