நாளை வேண்டும் நமக்கு நல்ல தீர்வது கிடைக்குமா? நடந்தவை எல்லாம் மறந்து வாழும்படி ஒரு முறையல்ல பல முறை கேட்டாச்சு.

நாளை வேண்டும் நமக்கு
நல்ல தீர்வது கிடைக்குமா?
============================
நடந்தவை எல்லாம்
மறந்து வாழும்படி
ஒரு முறையல்ல
பல முறை கேட்டாச்சு.
எப்போது நாம்
பிரிந்து போவதாக
சொன்னோம் என்று
கேட்டிட யாருமில்லை.
தலைவர்கள் என்று
தலைமைத்துவம் இல்லாத
தலைகள் மட்டுமே
இன்று வாழ்வதால்.
நடந்து கடந்து தான்
போகின்றோம் நாம்.
தலைவனை காலம்
தேர்ந்தெடுக்கும் வரை.
ஒரு நாள் மாறும்
நாம் எண்ணிய படி
நமக்கொரு நாடு ஆகும்.
அன்று ஆனந்தம் கூட்டும்.
தேடிப் பார்க்கிறேன்.
எந்த புத்திசாலித்தனமும்
இல்லாத முட்டாள்தனம்
மலிந்து கிடக்கிறது.
சிங்களம் என்ற
ஒற்றைச் சொல்லில்
எந்த தேறலும் இல்லை.
பாவம் அந்த மொழி.
அந்த மொழி வழி
பேசும் மக்கள்
பட்டினி கிடந்து
தவிக்கின்றனர் வாழ்ந்திட.
ஆட்சியில் ஒரு
பிடிப்பு இருக்கும்.
சிறு துண்டு உதவி
அதற்காக ஒரு ஓட்டு.
குடித்து விட்டு
அவர் ஏமாந்தார்.
அடுத்த நாள் காலையில்
தம் நிலை எண்ணி.
மீண்டும் அதே வழி
நாளையும் ஆகும்.
அடுத்த தேர்தலில்
அதே நாடகம் நடக்கும்.
ஊத்திக் கொடுத்து
ஊதி விட்டுப் போகும்
ஆளும் குணத்தால்
ஏழை வாழ்வு நாசம்.
அந்த ஏழைக்கு
இந்த உண்மை
என்று புரியுமோ?
அன்று வரும் அமைதி.
அடிப்பவனைத் தான்
பிடிக்க வேண்டும்.
அடி வாங்குபவனை
பிடித்தால் தீருமா பிணக்கு?
தமிழர் நாம்
இலங்கையில் தான்
தீர்வின்றி தினம்
ஓடுகின்றோம் வாழ்வில்.
சமாளிப்புக்கள் தான்
காலத்துக்கு காலம்
நடந்து போகின்றன.
பிணக்கு முடியாது.
நாளை வரும்
நல்ல மாற்றம்.
வாய் வழி இந்த
கதை தொடர்கிறது.
தீர்வுக்கு வேண்டும்
மனதில் திடம்.
அது வழி ஒரு
திட்டம் போடு வெல்ல.
இன்னும் ஒரு தடவை
முள்ளிவாய்கால் தான்
எமக்கு வேண்டாம்.
மாற்றம் காண்போம்.
........ அன்புடன் நதுநசி.



