மனிதனின் சுவாச மூச்சு சம்பந்தப்பட்ட முக்கியமான குறிப்புக்கள் இதோ....

#ஆரோக்கியம் #சுவாசம் #இன்று #தகவல் #லங்கா4 #Health #breathe #today #information #Lanka4
மனிதனின் சுவாச மூச்சு சம்பந்தப்பட்ட முக்கியமான குறிப்புக்கள் இதோ....

வளர்ந்த ஒரு மனிதனுடைய சுவாசம் நுரையீரலினால் இயக்கப்படுகிறது. நுரையீரல் செயலிழப்பின் அதன் மூலம் உண்டாகும் சுவாசமும் குழப்ப நிலைக்காளாகும். இந்த சுவாசத்தின் போது விடப்படும் மூச்சு பற்றிய சில தத்துவங்களை நாம் இப்போது ஆராயலாம்.

  • மூச்சு ஒருநாழிகைக்கு 360 
     
  • சுவாசம் ஒருநாளைக்கு 21600 
     
  • சுவாசம் மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். 
     
  • இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். 
     
  • இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். நம்முள் சுவாசம் நடக்கும் அளவு: 
     
  • அமர்ந்திக்கும்போது 12 அங்குலம் நடக்கும்போது 16 அங்குலம் ஓடும்போது 25 அங்குலம் உறங்கும்போது 36 அங்குலம் உடலுறவு கொள்ளும்போது 64 அங்குலம் 
     

சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்: 

  • 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும். 
  • 10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
  •  9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். 
  • 8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான். 
  • 7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 
  • 6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான். 
  • 5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும். 
  • 4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும். 
  • 3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும். 
  • 2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்.. 
  • 1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம். 
  • உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. 

எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.

  • ஞாயிறு, செவ்வாய் , சனி - இம்மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.
     
  • வெள்ளி, திங்கள் , புதன் - இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.
     
  • வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) - சந்திர கலை ஓட வேண்டும்.
     
  • அமரபட்சம் (தேய்பிறை) - சூரிய கலை ஓட வேண்டும். இம்முறையில்,
     
  • அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். 
     
  • இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
     
  • சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!