நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அறைக்கு பொறுப்பான நபர் விளக்கமறியலில்
#CourtOrder
#Colombo
#SriLanka
#sri lanka tamil news
#LANKA4
Prathees
3 years ago
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அறைக்கு பொறுப்பாக இருந்த மொஹமட் நியாஸ் என்ற நபரை மார்ச் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பொருளாகக் காணாமற் போனமை தொடர்பில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைப் பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் நகை அதிகார சபைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறி சந்தேகநபரிடம் இருந்து இந்தத் தங்கப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே