மினுவாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

#GunShoot #SriLanka #Police #Investigation #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
மினுவாங்கொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பீலாவத்தை அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (16) மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மாஜிஸ்திரேட் விசாரணையும், பிரேத பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.

கொலையைச் செய்த சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4