நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு இவ்வளவுவா...?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான "மெரினா" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் வெளியான எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ என தொடர் வெற்றிகளை குவித்து வந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன்.
சமீபத்திய ஆண்டுகளில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியை சந்தித்தன. இதனால் அவருக்குச் சாதகமாகச் சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிவகார்த்திகேயனை மீண்டும் வெற்றிக்கு கொண்டு வந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு வெளியான டான் படமும் சிவகார்த்திகேயனுக்கு ஹிட்டானது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலாவை இயக்கிய அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று 38 வயதாகும் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது ஒரு படத்துக்கு 25 கோடி வரை சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் பாடல்களும் எழுதுகிறார். சிவகார்த்திகேயனும் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்களை தயாரித்தார்.இந்த நிலையில், அனைத்தையும் கணக்கில் கொண்டால் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.