சொல்லும் முறை இனி வெல்லும் வகை ஆகாதோ? பொருந்தி வந்தும் பொருந்தாது சொல்லல் மனம் வருந்தி வாழத் தருகிறது. இன்றைய கவிதை 17-2-2023.

#கவிதை #வெற்றி #இன்று #தகவல் #லங்கா4 #Poems #win #today #information #Lanka4
சொல்லும் முறை இனி வெல்லும் வகை ஆகாதோ? பொருந்தி வந்தும் பொருந்தாது சொல்லல் மனம் வருந்தி வாழத் தருகிறது. இன்றைய கவிதை 17-2-2023.

சொல்லும் முறை இனி
வெல்லும் வகை ஆகாதோ?
-------------------------------------------------

பொருந்தி வந்தும்
பொருந்தாது சொல்லல்
மனம் வருந்தி
வாழத் தருகிறது.

பொய் சொல்லாது 
வாழல் நன்று .-சொன்னவர்  
சொன்ன  தில்லை
உண்மைகள் என்றும்.

திருடி வளம் சேர்த்து
பணம் கொண்டவரை
மேடையில் இருத்தி
மதிப்பளிக்கும் நிலை.

உண்மை சொல்லி 
வாழ்ந்தவர் மனை
களையிழந்து கிடக்க
எதற்கு உண்மை?

பொய்யாகினும் அஃது
நன்மை தரச் சொல்லின்
பொய்யாகவே அமையினும்
மெய்யாக கொள்ள சொன்னார்.

உலகப் பொதுமறை
வள்ளுவர் என்றால்
பிறகெதற்கு பொய் 
சொல்லல் குற்றம் என.

தேடிப் பாரும்
தேச மெங்கும்
சொன்னபடி வாழும் 
பெருந்தகை சிலரே?

கன்னத்தில் அறைந்தால் -உன் 
மறுகன்னத்தை காட்டு.
அறைந்தவர் நல்லவர்
ஆக இருக்க வேண்டும்.

யேசு சொன்னதை இங்கே
எல்லா இடமும் சொல்லல்
தவறு என காணமாட்டீரோ?
மாற்றம் ஆதலால் வராதோ?

நல்ல சிந்தை
இல்லா மனிதர்
அறைய கன்னம்
கொடுத்தால் என்னாகும்?

அப்போ வந்து
சொல்வார் கேளும்.
உனக்கு என்ன
அறி வில்லையா?

கொடுத்துண்டு வாழ
இறைவன் வந்து உமை
வாழ வைப்பான் எனில்
கொடுக்காது இருந்தால்.

வாழ்வை கெடுத்து
நிம்மதி பறிப்பானோ?
இலஞ்சம் வாங்கும்
ஊழியர் போலன்றோ?

நல்ல பழக்கம்
நலம் வாழ வைக்கும்.
எங்கே வந்து 
சொல்லும் வாழ்ந்தவரை.

முற்றும் துறந்த 
முனிவர் என்றால்
இறை மீது எப்படி
தீராக் காதல் இருக்கும்.

அதையும் துறந்தால்
தானே ஆகும்
முற்றும் துறந்த தாய்
ஏற்காதோ இந்த வாதம்?

கோபம் வேண்டாம்
பாவம் அது என்று.
நல்லுரை சொன்னவர்
பெண்ணை தொட்டுப்பார்.

பொத்துக் கொண்டு
கோபம் வரும்
உன்னைக் கொன்று
போட்டாலும் ஆச்சரியமோ?

தனக்கு வந்தால் 
தானோ வலி.
அவரவர் நலம் வாழ
தேவை எல்லாம் நல்லதே!

கோவிலுக்கு கூட்டம்
கூடி திருவிழா பார்.
ஒழுங்கும் காவலுக்கும்
காவல் துறை இருக்கும்.

களவு தடுக்க இங்கே
காவல் துறை எனின்
எதற்கு போகிறாய்
கோவிலுக்கு தான்.

உன் பொருளை காக்க
முடியாத கடவுள் 
உன்னை எப்படி 
காத்தும் போவான்?

கோபம் விட்டுச் சொல்.
படைத்தது இறைவன்.
பாடுபட்டு வாழவே!
கையேந்தி வேண்டிடவோ?

உழைத்துண்டு நீ
வாழ்ந்து போனால்
இறைவனிடம் எதற்கு
வேண்டிப் போவான்.

செய்யும் தொழிலே
தெய்வம் என்று
தொழிலில் காண்
இறைவனை என்றால்.

இந்த வாதம்
தப்பென்று சொல்வாரோ?
உறைக்கும் படி நீ
உன் மனதைக் கேள்?

சொல்லும் முறை மாற்றி
வெல்லும் வகை சொல்லிட
கேட்டுப் போதிலும்
பயன் என்பேன் நான்.
                                                                                                     ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!