ஐஏஎஸ் அதிகாரி கதிரவன் திடீர் மரணம்: முதல்வர் இரங்கல்

#India #Tamil Nadu #Tamilnews #M. K. Stalin
Mani
3 years ago
ஐஏஎஸ் அதிகாரி கதிரவன் திடீர் மரணம்: முதல்வர் இரங்கல்

தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் இன்று நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர்கள்  இரங்கலை தெரிவித்தார்.  

ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கதிரவன் இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி,  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002ஆம் ஆண்டு பயிற்சித்துறை மாவட்ட ஆட்சியராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். விழுப்புரம் கள்ளக்குறிச்சி அறந்தாங்கி கோட்டாட்சியராக பணிபுரிந்தார்.

இவர் இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியாக பணியாற்றும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் நடை பயிற்சி செய்யும் பொழுது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதிக்கும் பொழுது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகும் தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கதிரவன் ஐ ஏ எஸ் அவர்கள் உடல்நிலை குறைவின் காரணமாக மரணம் அடைந்த செய்தியை கேட்டு  அதிர்ச்சி வேதனை அடைந்தேன் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4