மகிழ் திருமேனி கதையை அப்படியே படம் பார்ப்பது போலையே சொல்லி அஜித்தை கவர்ந்திருக்கிறார்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் வலிமை. இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது ஆனால் ரசிகர்கள் மனதை கவரும் படியாக அமையவில்லை. அதற்கு காரணம் அஜித் இந்தப் படத்தில் செண்டிமெண்ட் சீன் வேண்டும் என்று கேட்டது தான்.
ஆனால் இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் அஜித் புது ரூட்டை மாற்றி துணிவு படத்தில் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். அதில் அவர் எதிர்பார்த்த மாதிரி இந்த படமும் பெரிய அளவில் வெற்றி படமாக மாறி ரசிகர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியது.
அதனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் அந்த மாதிரியான லேக் ஆகுற காட்சிகள் எதுவும் வேண்டாம் என்று மகிழ் திருமேனிடம் திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். இதிலிருந்து அவர் செண்டிமெண்ட் படங்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் மகிழ் திருமேனி இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார்.
அந்தக் கதையில் ஒன்று குடும்பங்களை கவரும் வகையில் பேமிலி சப்ஜெக்ட் கதையை கூறி இருக்கிறார். மற்றொன்று ஸ்பை த்ரில்லர் கதையை அப்படியே படம் பார்ப்பது போலையே சொல்லி அஜித்தை கவர்ந்திருக்கிறார். இந்த இரண்டு கதைகளை கேட்ட அஜித் எந்த கதைக்கு ஓகே சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை.
மேலும் அஜித், ஏகே 62 படத்திற்காக சில கண்டிசன்களை மகிழ் திருமேனியிடம் போட்டு இருக்கிறார். இது எல்லாத்தையும் கடந்து ஏகே 62 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று மும்மரமாக மகிழ் திருமேனி களத்தில் இறங்கி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதால் இது குறித்து அப்டேட்டுகள் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அவர் துணிவு படத்தின் வெற்றியை பார்த்ததால் கண்டிப்பாக ஆக்சன் படத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த மாதிரியான காட்சிகள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. அதனால் அவரின் வெற்றி பார்முலாவை தான் கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.