கவலை கலைத்து நீ...கவலை வந்து மனதில் இருந்தால் மகிழ்ச்சி ஓடி மறைந்து போகும். இன்றைய கவிதை 18-02-2023.
#கவிதை
#துன்பம்
#இன்று
#தகவல்
#லங்கா4
#spiritual
#Sorrow
#today
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

கவலை கலைத்து நீ
*******************************
கவலை வந்து
மனதில் இருந்தால்
மகிழ்ச்சி ஓடி
மறைந்து போகும்.
கலவரம் மனதில்
குழப்பம் தந்திடும்.
முகத்தில் மாற்றம்
தானே மலர்ந்திடும்.
மெல்ல வந்து அது
அழுத்தம் கொடுத்து
அழகை கெடுத்து
வாழ்வை சிதைத்திடும்.
ஆரோக்கியம் அப்போ
மாயமாகி போகும்.
குடும்பம் கூட சிதறி
வாழ்விழந்து நிற்கும்.
இருந்த வளம் கரைந்து
கானல் நீராகி தான்
கற்பனை வானம் மிஞ்சும்.
ஏன் தானோ இது?
கவலை கலைத்து
மனதில் இருத்து
மகிழ்வைத் தான்.
அழகு மெருகேறிடும்.
........ அன்புடன் நதுநசி.



