நாம் வெல்வது உறுதி  உங்களிற்காக நாம் இருக்கிறோம்  உங்கள் முகத்தில் உவகையை பரிசளிக்கவே  உங்களிற்காக  எமது உதிரத்தையும் தருவோம். கவிதை....

#கவிதை #வெற்றி #லங்கா4 #தகவல் #இலங்கை #Poems #win #information #Lanka4 #SriLanka
நாம் வெல்வது உறுதி  உங்களிற்காக நாம் இருக்கிறோம்  உங்கள் முகத்தில் உவகையை பரிசளிக்கவே  உங்களிற்காக  எமது உதிரத்தையும் தருவோம்.  கவிதை....

உரை...

நாம் வெல்வது உறுதி 
உங்களிற்காக நாம் இருக்கிறோம் 
உங்கள் முகத்தில் உவகையை பரிசளிக்கவே 
உங்களிற்காக 
எமது உதிரத்தையும் தருவோம்
அதையும் தாண்டி தாண்டி 
எமது உயிரையும் உங்களிற்காகவே தருவோம்

பாடல்....

அணி வகுப்போம்
அணி வகுப்போம்
தியாகி 
ஐயா தலைமையில் 
அணி வகுப்போம் / எங்கள் 
ஐயா தலைமையில் 
அவை அமைப்போம்…

துணை இருப்போம் 
துணை இருப்போம் / உங்கள் 
துயரை துடைக்கவே 
துணை இருப்போம்
உங்கள் துயரை துடைக்கவே 
துணை இருப்போம்

வளி சமைப்போம் 
வளி சமைப்போம் / உங்கள் 
வலியை கழைந்து 
வளி சாமைப்போம் 

மக்கள் சேவையே எம் நோக்கு 
துக்கம் தனையே துடைத்திடுவோம்.
மெய்யைப் பேசி முகம்கொடுப்போம் 
செய்கை தன்னிலே வென்றேடுப்போம்  
சொல்வதில் மட்டும் பயனில்லை  
சுதந்திர காற்றை உமக்களிப்போம்.

பட்டினி வாழ்வு இனி வேண்டாம் 
கொட்டிலில் வாழ்வும் அது வேண்டாம் . 
போர் தந்த வலியை போக்கிடுவோம்
பாரினில் தமிழை ஏற்றிடுவோம் 
தமிழே இங்கே ஒரு ஜாதி 
தாரக மந்திரம் ஓதிடுவோம் 
தன்னலம் தனையே மறந்திடுவோம் 
தலைவரின் வழியை நினைத்திடுவோம்

ஆண்ட பரம்பரை நாமென்ரோ 
கூண்டில் வாழ்வது எமக்கிழிவு
வேண்டும் வேண்டும் எமதுரிமை 
மாண்ட துயர்கள் இனி போதும்
செய்வோம் என்பது எமது மொழி 
செயலில்  செய்வது உயர்ந்த வளி
பொய்கள் புறங்கள் தனை கழைவோம் 
பேய்கள் ஆட்சியை முடித்திடுவோம் 
சொல்லில் மட்டும் கிடையாது 
செயலை அமைத்து சாதிப்போம் 
தமிழே எங்கள் உயிர் மூச்சு 
தலைவன் சொல்லே திரு நாமம் 
இலங்கை தமிழர் நாமன்றோ
ஈழ மறவர் வழி திறப்போம்
சிறையில் வாடும் உறவுகளை 
சிறகை கொடுத்து பறக்க வைப்போம்
ஆண்டவன் எங்கள் பக்கமடா 
ஏழைகள் பக்கம் நாங்களடா 
ஏழைகள் சேவை எம் நோக்கு 
நாளைகள் எமது சொந்தமடா  
ஈழ தமிழர் ஆண்ட குடி
ஈகம் தனை நினைத்திடுவோம் /  
இட்ட விதைகள் முழைக்கட்டும் 
ஈனப் பிறவிகள் ஒழியட்டும் 
ஞாலம் சென்று பறை முழக்கி 
நீதிதனியே நிமிர செய்வோம்  
வெற்றி என்பது உறுதியடா 
வீர மறவர் தகுதியடா
தியாகம் செய்யும் தியாகியடா. 
திக்குகள் தாண்டி தோள் கொடுப்போம்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!