நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
3 years ago
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி தரிசனம் செய்து வீடு திரும்பி நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார்,  பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மயில்சாமி உயிர் பிரிந்தது.

மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது, இவர் மறைவையொட்டி தமிழ் திரையுலகத்தினர் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது, ரஜினிகாந்த், கமலஹாசன், விக்ரம், பார்த்திபன்,  ட்ரம்ஸ் மணி
நகைச்சுவை நடிகர்கள் மனோபாலா மற்றும் திரைத்துறையினர்கள் தங்கள் இரங்கலை 
 தெரிவித்து வருகின்றன.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களும் மயில்சாமி மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இவர் விவேக் வடிவேல் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகருடன் மயில்சாமி நடித்த காமெடிகள் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும், இவர் 1987 முதல் சிறு வருடங்களில் மற்றும் நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4