உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம்

#TamilCinema #Tamil Nadu
Mani
3 years ago
உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம்

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றி பிரபலமானவர். விஸ்வாசம் படத்தில் அஜித்குமார், மாரி படத்தில் தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இரண்டு கிளிகளை வளர்ப்பது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒருவர் புகார் அளித்ததால், அதிகாரிகள் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு அலெக்ஸாண்டிரியன் பச்சைக் கிளிகளை கூண்டுகளுடன் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4