சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

#SriLanka #Arrest #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Red alert
Abi
1 hour ago
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

டுபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பாசிக், மேலும் இரண்டு சந்தேகநபர்களுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தெஹிவளை – களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக்கிற்கு சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர் 2018ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றதாகவும், கடந்த மே 26ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் Air Arabia 3L-708 விமானம் மூலம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார். 

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4