7,000 சதுர அடியில் கலைஞர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பார்வையிட்டார்.

#Tamil Nadu #Tamil #Tamilnews
Mani
3 years ago
7,000 சதுர அடியில் கலைஞர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் தி.மு.க. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முதல்வர், மு.க. ஸ்டாலின் அன்று மாலை திருவாரூர் வருகிறார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம்  அம்மையாரின் நினைவிடத்துக்கு அவர் செல்கிறார். 7,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிடுகிறார். அன்று இரவு அவர் தனது இல்லத்தில் ஓய்வெடுக்கிறார்.

நாளை புதன்கிழமை மன்னார்குடியில் திருவாரூர் மாவட்டம் தலையமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலு இல்ல திருமண விழா நடைபெறுகிறது. மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை திருவாரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி சென்று திருமணத்தை நடத்துகிறார். திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். அதன்பின், திருச்சிக்கு கார் மூலம் சாலை வழியாக சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வழியெங்கும் தி.மு.க. கொடிகளை கட்டி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4