திறமை இருந்தால் ஏழைகள் உண்டு பாரும். நின்று சொல்லும் இந்த புதினம் பெரிது இல்லை என்று சொல்வேன். இன்றைய கவிதை 21-02-2023.

திறமை இருந்தால்
ஏழைகள் உண்டு பாரும்.
==========================
நின்று சொல்லும்
இந்த புதினம்
பெரிது இல்லை
என்று சொல்வேன்.
நூறோடு இருந்தால்
ஆயிரத்தோடு ஒரு
உரிமை தேடி போக
வாய்ப்பு இருந்தால்.
மறுத்துப் போகும்
குணம் அவர் விருப்பு.
இருந்தும் தேவை இங்கே
இருப்பது மறுப்பாரோ?
ஏழை அதிகம் இருக்க
எனை நான் சொல்லவோ
வசதி படைத்தவன் என
இறுமாப்போடு இங்கே!
நட்பு வட்டம்
வந்து பாராட்ட
சூழல் போதுமோ?
முயலல் போதாதே!
பிறந்த ஊரும்
நாம் வாழும் ஊரும்
வளையை வந்து வாட
உண்ண மட்டும் கொடுக்கும்.
உண்டு வாழ
எண்ணம் இருந்தால்
அது மட்டும் இங்கே
போதுமென்றால் சரியோ?
திறமையும் இருக்கு
அது வழி கலையும்
கூட அவனிடம் இருக்க
காசாக்கி வறுமை போக்கு.
வீண் பிடிவாதம்
கொள்கைப் பிடிப்பு
ஆகிப் போகலாம்.
இலாபம் என்னவோ?
போற்றிப் புகழும்
முன்னே சொல்லும்.
ஏழைகள் அதிகம்
நம்மைச் சூழ இன்று.
நின்று கேளும்
தந்தை கூட
தாய் நாட்டில்
என்ன கண்டார்.
பிள்ளை கூட இன்று
பிறர் தேசம் சென்று
உழைக்கும் படி நாடு
இன்றும் வறுமையில்.
மாற்றம் ஒன்று
நன்றே ஆனால்
நாளையாகினும் நாடு
நலம் பெறாதோ?
. ...... அன்புடன் நதுநசி



