உங்கள் பற்கள் வெண்மையாக கறையற்று காணப்பட தினமும் இச்சிகிச்சை முறை மூலம் பல் துலக்கி பாருங்கள்.
நண்பர்களே உங்கள் பல் பாசி படிந்து மஞ்சள் கலருடன் பச்சையாக துர்நாற்றத்துடன் இருக்கிறதா. ஒரு தடவை இந்த முறையில் பல் துலக்கி பாருங்கள். உங்கள் பற்களில் ஏற்படும் மாற்றத்தை கண்டு நீங்களே உங்கள் பல் பளிச்சென மின்னி துர்நாற்றமின்றி மாறியிருப்பதனைக் காண்பீர்கள்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் ஆரம்பத்தில் மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் தயக்கத்துடன் பேசுவார்கள். இந்த சிகிச்சைக்குப்பிறகு நட்பு கொண்டு எல்லோரிடமும் தயக்கமின்றி பேசுவார்கள்.
முதலில் 4-5 பல் உள்ளியை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் எடுத்து நன்கு துருவி பசையாக்கப்பட்ட உள்ளியுடன் சேர்த்து, பின்னர் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி வந்த சேர்வையை உங்கள் துாரிகையில் சேர்த்து ஒரு 2 நிமிடம் உங்கள் பற்களை துலக்கிப்பாருங்கள்.
பற்களில் கறை உள்ளவர்கள் இதை செய்து வரும் போது கறை நீங்குவதை காணுவீர்கள். மஞ்சள் துர்நாற்றத்தை தடுக்கவல்லது. அது துர்நாற்றத்தை உண்டு பண்ணும் கிருமிகளை கொல்ல வல்லது. உங்கள் பற்களில் இந்த கறை அரை வருடத்திற்கும் மேலே பல நாட்களாக இருக்குமாயின் இக்கலவையுடன் சிறிது அரை தேசிக்காய்ச்சாறு சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களிடம் தேசிக்காய் இல்லாவிட்டால் அதற்குப்பதிலாக தக்காளிச்சாறும் பயன்படுத்தலாம். இந்தப்பொருட்களில் இருக்கும் இயற்கையான துாய்மையாக்கும் இரசாயனம், பற்களை ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதோடு கறைகளை நீக்கவும் வல்லது.
எந்த வித பக்க விளைவுகளும் இதில் இல்லை. நீங்கள் சாதாரணமாக பாவிக்கின்ற துாரிகையிலேயே இவற்றை சேர்த்து துலக்கி வெள்ளை துர்நாற்றமற்ற பற்களை நீங்களும் பெறலாம்.
மிகவும் ஆரோக்கியமான இம்முறையை வைத்தியர்களே சிபார்சு செய்கின்றனர். இந்த சிகிச்சை முறையை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.