பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்! வார்னர் ஹேசில்வுட் தொடரில் இருந்து விலகல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை 4 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது, இதில் இந்திய அணியின் அபார ஆட்டத்தால் நாக்பூர் டெல்லியில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன் கோப்பையை தன் வசப்படுத்தி உள்ளது. வருகின்ற 1 march தேதியில் மத்திய பிரதேசம் இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பாட்டன் நேற்று விலகி உள்ளார். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது நாளில் இந்திய வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்தை டேவிட் வார் ஹெல்மெட்டில் தாக்கியது, அடுத்த இரண்டு ஓவர்களில் அவர் வீசும் மற்றொரு பந்து அவருடைய இடது முழங்கையை பதம் பார்த்தது.
அவருக்கு முழங்கையில் லேசான எலும்பு முறிவு உள்ளது தெரிய வந்தது ஸ்கேன் பரிசோதனையில் மூலம் அறியப்பட்டது, ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் தலையில் அதிர்வு கூடுதலாக இருந்ததாக வார்னர் பீல்டிங் செய்யவில்லை. வாணர் காயம் விவகாரத்தில் அவசரம் காட்ட மாட்டோம் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனைப்படி நடப்போம் என்று அணி தலைமை பயிற்சியாளர் அறிவித்தார்.
வாணருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதால் அவர் நாடு திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்காக பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையான ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணம் ஹேசில்வுட், வாரணம் தொடரில் இருந்து ஒதுங்கி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு.