காதல் வழி சரியாகி போனால்... அன்பு கலந்து  கூடி வாழும்  நோக்கில் சேர்ந்து கொண்டது காதல். இன்றைய கவிதை 23-02-2023.

#கவிதை #காதல் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Love #today #information #Lanka4
காதல் வழி சரியாகி போனால்... அன்பு கலந்து  கூடி வாழும்  நோக்கில் சேர்ந்து கொண்டது காதல். இன்றைய கவிதை 23-02-2023.

காதல் வழி
சரியாகி போனால் 
******************************

அன்பு கலந்து 
கூடி வாழும் 
நோக்கில் சேர்ந்து
கொண்டது காதல்.

இலக்கிய வழி 
ஒரு விளக்கம்
காதலுக்கு கொடுத்து
புனிதம் பேசுவார்.

அந்த இலக்கியம்
சொன்னது குறைவு.
காதலின் துயர் 
வாழ்வின் வலி.

நீண்ட காலம்
காதல் வாழ்வில்
கலந்து வந்த
இல்வாழ்வு இங்கே

தோற்றுப் போனது
கண்டும் பாரும்
திருந்திட யாரும்
வந்தது இல்லை.

கண்ட உடன்
கொண்டது தப்பு.
நல்லதோ கெட்டதோ
யார் அறிந்தது?

உழைப்பு என்ன
கேட்டு நின்றால்
பொறுப்பு என்ன 
விடை வந்து விடும்.

சேமிப்பு எங்கே
எப்படி போனது
வீணாக உழைப்பு
கண்டவர் வெல்வார்.

இவை விடுத்து
காமம் தந்த அந்த
இச்சை வழி ஓடி
குழி விழுந்து சாகவோ?

நாளை வந்து ஆகும்
வாழ்வில் வறுமை.
காரணம் சொல்லி 
காலம் அழிக்கலாமோ?

கவர்ந்து கொண்டு
காதல் வந்தால்
காலம் கழியும்
சோகத்தோடு பாராயோ?

காமம் உள்ளும்
அன்பு வெளியும்
கலந்து கொண்ட
வாழ்வு காதல் அன்றோ?

ஏற்றம் ஒன்றை
முன்னே கண்டு
கூடி நின்று தானே
காதல் கொண்டால்.

அந்த காதல் பாரும்
சொந்தம் சேர்ந்து
மகிழ்ந்து வாழும்
சூழல் ஆக்கினால்.

நாளை உங்கள்
குழந்தைகள் கூடி
கற்றுத் தேறும்
சூழல் தானே ஆகும்.

சாதி வேற்றுமை
வேண்டாம் இங்கே
பேச்சில் சொல்லி
இன்றும் வாழ்கிறது.

வறுமை வந்து 
வாழ்வு கெட்டு
இருந்த மகிழ்வும்
தொலைத்து நிற்கிறது.

கொள்ளும் முன்னே
கொள்ளளவு காணும்.
எள்ளளவு தானும்
முயற்சி வேணுமன்றோ?

வீண் வீராப்பு விடுத்து
வரம்பு உயர இங்கே
விளைச்சலும் உயரும்
கண்டு கொண்டால்.

ஆடிப் பட்டம்
தேடி விதைக்கும்
விற்பன்னர் ஆகிட
வாழ்வு மலராதோ?

வாழும் வழி தேடி
அந்த வழி நாடி
விரும்பி வாழும்
கோலம் ஆக்கலாமே!

காதல் ஒன்றும்
பேச்சில் வேண்டாம்.
நன்றே புரிந்து
நலமே வாழ வேண்டும்.

நின்று யோசி
நன்று வாழ.
வென்று போகும்
நேரம் ஆகும்.

பொய்யுக்கு தீனி
காதல் தந்தால்
மெய்யுக்கு கூலி
வாழ்வு கொடுக்கும்.

வாழ்ந்து பாரும்
காதல் நன்றே
செய்து இங்கே தான்.
நாளை நலம் வாழ.

பொருந்தி வந்த
காதல் வாழும்.
வாழ்வில் என்றும்
வசந்தம் வீசும்.

நெஞ்சில் கொண்ட
பாசம் கொஞ்சம்.
மஞ்சம் மிஞ்சி
மஞ்சள் பூசும்.

கஞ்சல் கூடி
கூட்டெரு ஆக்கும்.
பயிரும் இங்கே
செழித்து வளரும்.

வறுமை போக்கும்
வழிகள் தேடும்.
வளத்தோடு நாளும்
வாழ்ந்து மகிழும்.

                                                                                                   ........ அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!