உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேறுவதற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களிப்பு

#world_news #America #Russia #Ukraine #India
Mani
3 years ago
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேறுவதற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. 366 நாட்களாகப் போர் தொடர்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

இதனிடையே, இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வரும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் இந்தப் போர் பல மாதங்களாக நடந்து வருகிறது.

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐ.நா சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஐநாவில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் சபையில் வாக்களித்தன. தீர்மானத்திற்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேறுவதற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்ததை அடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4